ஆணவத்தின் உச்சியில் கொக்கரிக்கும் அமித் ஷா…! ஊழல் பற்றி பேச என்ன அருகதை இருக்கு? செல்வப் பெருந்தகை கொந்தளிப்பு..!
உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆணவத்தின் உச்சிக்கே சென்ற கொக்கரிப்பதாக செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இந்தியாவிலேயே காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மீது அச்சுறுத்தல்களை பரப்பி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்ததை தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக ஒருங்கிணைந்து, கொள்கை சார்ந்து கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் நேற்று பா.ஜ.க. கூட்டத்தில் அமித்ஷா பேசும் போது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பேசியிருக்கிறார் என்றும் அந்த மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அ.தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சியும் பங்கேற்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பா.ஜ.க.வோடு நிர்ப்பந்தத்தின் பேரில் கூட்டணி அமைத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் கூட்டத்தில் பேசும் போது, அ.தி.மு.க. வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியிருக்கிறாரே தவிர, தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியைப் பொறுத்தவரை எங்கே தொடங்கி, எங்கே முடிவடைகிறது என்பதிலே தெளிவில்லை, குழப்பம் நீடிக்கிறது என்றும் இந்தியா கூட்டணியை பொறுத்தவரை நாங்கள் தெளிவோடு தமிழ்நாட்டு மக்களின் நலன் சார்ந்து செயல்பட்டு வருகிறோம் எனவும் உறுதிப்பட தெரிவித்தார். அமித்ஷா ஊழலைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல இருக்கிறது இன்று விமர்சித்த செல்வ பெருந்தகை, தேர்தல் பத்திர நன்கொடை மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு அரசு திட்டங்களில் சலுகை வழங்கி நன்கொடையை குவித்த கட்சி பா.ஜ.க. இதையறிந்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர நன்கொடையை ரத்து செய்தது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கு... இதை செய்யுங்க..! அமைச்சர் ஐ. பெரியசாமியின் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்...!
தேர்தல் அறக்கட்டளை மூலம் நன்கொடைகளை குவிக்கிற நிலையில் ஊழலைப் பற்றி பேச அமித்ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது என சாடினார். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை ஒழித்தே தீருவேன் என்று அமித்ஷா ஆணவத்தின் உச்சிக்கே சென்று கொக்கரிக்கிறார் என்றும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டு வரும் தமிழ்நாடு அரசை அழிக்க வேண்டுமென்று கூறுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது எனவும் கேட்டார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு பல உத்திகளை பா.ஜ.க. அரசு கையாண்டு வருகிறது என கூறியுள்ள செல்வபெருந்தகை, தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிற பா.ஜ.க.வையும், அதோடு கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.வையும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என கூறியுள்ளார். ஒருமுறையல்ல, இருமுறையல்ல. தமிழ்நாட்டிற்கு அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் அவரது ஒவ்வொரு சுற்றுப்பயணமும் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்ப்பதோடு, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவு நாளுக்கு நாள் பெருகும் என உறுதிபட கூறினார்.
இதையும் படிங்க: வருவாய், பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ. 13 கோடியில் புதிய வாகனங்கள்... துவக்கி வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்...!