2026லும் திமுகவுடன் தான் கூட்டணி.. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உறுதி..!
2026 லும் திமுகவோடு தான் காங்கிரஸ் கட்சி கூட்டணி என செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம் பறிபோன ஆட்சியை மீண்டும் பிடிப்பதில் அதிமுக செயல்பட்டு வருகிறது. பாஜகவுடன் மீண்டும் கூட்டணியை உறுதி செய்து செயல்பட்டு வருகிறது அதிமுக. பல கட்சிகளுக்கு கூட்டணி அழைப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்து வருகிறார்.
இவை ஒரு பக்கம் இருக்க திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது என கூறி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் பரவியது. இதனை மறுக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேசி உள்ளார். 2026 தேர்தலிலும் திமுகவுடன் தான் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி என்ற உறுதிப்படுத்த அறிவித்துள்ளார்.
செல்லப்பெருந்தகை பேச்சின் மூலம் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கும் என்ற தகவல் மறுக்கப்பட்டுள்ளது. திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நீண்ட கால உறவு இருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு உறவு ரீதியாக இரு கட்சி தலைவர்களும் பழகி வருகின்றனர். ராகுல் காந்தியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சகோதரர் என்று அழைப்பார்.
இதையும் படிங்க: அரசியல் நாகரிகம் இல்லாதவர் ராஜேந்திர பாலாஜி... செல்வப் பெருந்தொகை பதிலடி...!
அந்த அளவுக்கு நெருக்கம் வாய்ந்த இந்த கூட்டணி உடையும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் அதனை மறுக்கும் வகையில் செல்வப் பெருந்தகை தற்போது கருத்து தெரிவித்துள்ளார். திமுகவில் இருந்து பல கட்சிகள் தங்களுடன் கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவந்த நிலையில் அவரது கூட்டணி அழைப்பை மார்க்சிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிஜிபி ஆபீசுக்கு பறந்த வெடிகுண்டு மிரட்டல்… சோதனையே வேண்டாம்! நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு…!