பண்ணையார் கூட வருவாரு.., பனையூர்காரர் வரமாட்டாரு…! விஜயை கலாய்த்த சீமான்..!
பண்ணையார்கூட பஞ்சாயத்துக்கு வருகிறார் எனவும் பனையூர்க்காரர் வர மறுக்கிறார் என்றும் சீமான் விமர்சித்தார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்திய போது கூட்டம் நெரிசல் ஏற்பட்ட 41 பேர் உயிரிழந்தனர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இதுவரை சந்திக்கவில்லை. அவர் கரூருக்கு சென்று சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அடைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை மாமல்லபுரத்தில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திக்க உள்ளார். விஜய் பனையூரை விட்டு வெளியே வர மாட்டார் என்ற விமர்சனங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்னையில் சந்திக்க திட்டமிட்டுள்ளதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
கூட்ட நெரிசலில் உயி*ழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு விஜய் வரச் சொல்கிறார் என்றும் எல்லா ஓட்டுப் பெட்டியும் பனையூரில் வை எனச் சொல்வார்களா எனவும் கேள்வி எழுப்பினார். பண்ணையார்கூட பஞ்சாயத்துக்கு வருகிறார் எனவும் பனையூர்க்காரர் பஞ்சாயத்துக்குக்கூட வர மறுக்கிறார் என்றும் தெரிவித்தார். விஜயை நோக்கி சில கேள்விகளை தான் கேட்டேன் என்றும் உடனே எதிர்க்கிறேன் என சொல்லிவிட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணியா? என்ன செய்ய போறீங்க? நயினார் நாகேந்திரன் சூசகம்...!
அவர்கள் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை என்று கூறிய சீமான், என் நண்பனாக இருக்க எந்தத் தகுதியும் தேவையில்லை என்றும் ஆனால் எதிரியாக இருக்க தகுதி வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ‘மோந்தா’ புயலை விட ஸ்பீடு அள்ளுதே... சைலண்ட்டாக சம்பவம் செய்த விஜய்... திமுக, அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த தவெக...!