×
 

#BREAKING: எனக்கு HAPPY தான்! கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பரபரப்பு கருத்து

அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதில் மகிழ்ச்சி என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை மீது அதீத அதிருப்தியில் செங்கோட்டையன் இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே, வெற்றி வாகை சூடுவதற்கு, நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் செங்கோட்டையம் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மனமகிழ்ச்சியோடு எதிர்காலத்தை நோக்கி மக்கள் நினைப்பதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.

அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்து உள்ள நிலையில், அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்றிலிருந்து அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்... இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே கருத்து கூறினேன் என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைப்பு வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை என்றும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உடனே வாங்க... இபிஎஸ் அழைப்பு! திண்டுக்கல்லுக்கு விரைந்த அதிமுக முக்கிய தலைகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share