×
 

பழக்க தோஷம்ப்பா... வாய் தவறி இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட செங்கோட்டையன்..!

தேர்தல் பரப்புரையின்போது தவறுதலாக செங்கோட்டையன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாக இருந்தது. அதில் ஒரு சுவாரசியமான சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நிகழ்ந்தது. முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளருமான கே.ஏ. செங்கோட்டையன், தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். செங்கோட்டையன், அதிமுகவில் நீண்டகாலம் பணியாற்றியவர்.

பல தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அந்தக் காலகட்டத்தில் இரட்டை இலை சின்னத்துக்காகவே அவர் பல ஆண்டுகள் வாக்கு சேகரித்து வந்தார். அதிமுகவில் இருந்து விலகி, 2025இல் தவெகவில் இணைந்த பிறகு, இந்த முறை விசில் சின்னத்துக்காக வாக்கு கேட்கும் பொறுப்பு அவருக்கு வந்தது. ஆனால், பழக்கத்தின் விளைவாக ஒரு சிறிய தவறு நிகழ்ந்துவிட்டது.

சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற ஒரு பிரச்சாரக் கூட்டத்தில், தவெக வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய செங்கோட்டையன், திடீரென “இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என்று கூறிவிட்டார். அந்தக் கணத்தில் அவர் தவறு செய்ததை உணர்ந்து உடனடியாக சுதாரித்துக் கொண்டார். “இரட்டை இலை என்று கேட்டு கேட்டு பழகிவிட்டேன்” என்று சிரித்தபடி சமாளித்தார்.

இதையும் படிங்க: ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் போச்சே...!! - வாக்காளர்கள் மத்தியில் வாய் விட்டு கதறிய செங்கோட்டையன்... தவெகவினர் ஷாக்...!

அந்தக் காட்சி வீடியோவாக பதிவாகி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. தவெகவின் விசில் சின்னத்தை முன்னிறுத்தி, “எல்லா குழந்தைகளின் கையிலும் விசில் சின்னம் உள்ளது” போன்ற வசனங்களுடன் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அதிமுகவில் இருந்து வந்த அவரது அனுபவம், தவெகவுக்கு ஒரு பலமாகக் கருதப்பட்டாலும், இந்தத் தவறு அவரது பழைய அரசியல் பின்னணியை நினைவூட்டியது.

இதையும் படிங்க: ரூ.5,000 கோடி சம்பாதிக்க ப்ளான் போட்டாரு இபிஎஸ்!! விஜய் ஆதரவுக்கு ஸ்கெட்சும் போட்டாரு! செங்கோட்டையன் பகீர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share