கைவிரித்த காங்கிரஸ்... தவெக தனித்து போட்டியா? ... செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்...!
பொறுத்திருந்து பாருங்கள் தனித்தா அல்லது வலிமையான கூட்டணியா என்பது தெரியும்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார வாகனத்தை அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தவெக சார்பில் முதல்கட்டமாக ஈரோடு தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய் படம், விசில் சின்னத்துடன் வாகன பிரச்சாரம் விசில் சின்னத்தை, கிராமம் தோறும் தெரிந்து கொள்ளும் வகையில் பிரசாரம் செய்ய உள்ளோம். விஜய் புதிய வரலாற்றை உருவாக்கும் வகையில் விசில் சின்னத்தை பொதுக்குழுவில் அறிவித்தார். குழந்தைகள் முதல் அனைவரும் விசில் அடிக்கும் வகையில்தமிழகம் பெரிய வரலாற்று மாற்றத்தை உருவாக்க இருக்கிறது .
ஜனநாயகத்தை காக்கின்ற வாக்குகளை வீணடிக்காமல் திமுகவை வீழ்த்துகின்ற சக்தியாக உள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும், அப்போதுதான் ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியும். ஐந்தாயிரம் ரூபாய் தந்துள்ளார்கள், அது மாதம் ஒருவருக்கு 40 ரூபாய் தான் கிடைக்கிறது. இதற்காக வாகரகளிக்க முடியாது. 5 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்க மக்களை ஏமாற்ற கூடிய திட்டமாக இருக்கிறது. தேர்தல் களத்தில் 3 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்கிறார்கள் அது மாதத்திற்கு வெறும் 50 ரூபாய் மட்டும்தான் கணக்கு வரும். இதனைப் பெற்றுக் கொள்வதன் மூலமாக மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஆனால் ஏமாற்றம்தான் வரும் தமிழ்நாடு மக்கள் தமிழக வெற்றிக் கழக வெற்றி பெறச் செய்யக்கூடிய ஒரே முகமாக இருக்கிறார்கள் விஜய் கோட்டையில் கொடியேற்றுவதை காண மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி தவெகவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது தமிழக வெற்றிக்கழகம் தனித்துப் போட்டியிட தயாராகி விட்டதா..? என்ற கேள்விக்கு, காங்கிரஸ் என்றுமே திமுகவுடன் தான் கூட்டணியில் இருந்து வருகிறது். சில மனமாச்சியரியங்கள் வந்துள்ளன. எங்களால் அவர்களுக்கு பயன் கிடைத்திருக்கிறது அவ்வளவுதான் ஒவ்வொரு கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும், திமுக கூட்டணியாக இருந்தாலும் எங்களை காட்டி கூடுதல் சீட்டுகளை பெறக்கூடிய நிலை தான் இருக்கிறது. ஆகவே எங்களிடத்தில் வந்து விடுவோம் என்று சொல்லி கூடுதல் சீட்டுகளை காங்கிரஸ் பெற்று இருக்கிறார்கள்.
தவெக தனித்து நிற்க தயாராகி விட்டதா.? என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் தனித்தா அல்லது வலிமையான கூட்டணியா என்பது தெரியும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: அங்க போறானு தெரியாதுங்க..! விஜய் நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!