அங்க போறானு தெரியாதுங்க..! விஜய் நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!
விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய விக்னேஷின் தந்தை பேட்டி அளித்தார்.
தஞ்சாவூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. உற்சாகத்துடன் நிகழ்ச்சி நடந்த நிலையில் ஒரு விபத்து நடந்தது. இன்று தஞ்சையில் விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் அவரது வாகனத்தை சிலர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
மொத்தம் ஐந்து பேர் விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் விக்னேஷ் என்ற இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சையில் தவெக தலைவர் விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய மாணவர் விக்னேஷின் தந்தை பாண்டியன் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
தன்னுடைய இரட்டை மகன்களில் ஒருவர்தான் விக்னேஷ் என்றும் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு தான் சென்றார் எனவும் தெரிவித்தார். ஆனால் என்னுடைய நண்பரின் வாகனத்தை வாங்கி கொண்டு விஜயை பார்ப்பதற்காக சென்றது எனக்கு தெரியாது என்றும் கல்லூரிக்கு சென்றிருக்கிறான் என்றுதான் விட்டு விட்டோம் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் அண்ணா WELCOME..!! திருச்சி TO தஞ்சை பயணம்... பூமழை பொழிந்து தொண்டர்கள் உற்சாகம்..!!
ஆனால், திடீரென என்னுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்கள் மகன் விஜயை பார்க்கச் சென்று விபத்தில் சிக்கிக்கொண்டார்., அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என கூறியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். கல்லூரி நிர்வாகம் என்னுடைய மகன் கல்லூரிக்கு வரவில்லை என்பதை முறைப்படி எனக்கு தெரிவித்திருக்க வேண்டும் என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என்னுடைய மகனின் நிலைமை எப்படி இருக்கிறது என்று என்னிடம் சொல்ல மறுக்கின்றனர்.,பார்க்கவும் விடவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: இளைஞர் கவலைக்கிடம்... விஜய் வாகனத்தை பின் தொடர்ந்ததால் விபத்து..!!