×
 

போராட்டம் தீர்வல்ல... வேணுங்கிறதை கனிவா கேளுங்க... பால் உற்பத்தியாளர்களுக்கு செங்கோட்டையன் அட்வைஸ்...!

விலை உயர்த்த கனிவாக கேட்பதுதான் ஜனநாயக மரபு  என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல் 

பால் கொள்முதல் விலை மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.போராட்டம் ஒரு தீர்வு அல்ல எனவும், தமிழக அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, விலை உயர்த்த கனிவாக கேட்பதுதான் ஜனநாயக மரபு  என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல் 

தமிழகத்தில் 6984 இடங்களில் நடைபெற உள்ள கால்நடைகள் விழிப்புணர்வு முகாமின், முதற்கட்ட முகாம், சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது ஆடு, கறவை மாடுகள் ஆகியவற்றை அழைத்து  வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடைத்துறை அமைச்சர் திருமதி. கமலி ஆகியோர் கலந்துகொண்டு கால்நடைகள் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்தனர். 

குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், கால்சியம் குறைபாடு உள்ள கால்நடைகளை கண்டறிந்து அவற்றுக்கு தரமான சிகிச்சை அளிப்பதே இந்த முகாமின் நோக்கம் எனவும் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

செய்தியாளர்களை சந்தித்த கே.ஏ. செங்கோட்டையன் கூறும்போது, தமிழகத்தில் பால் கொள்முதல் விலை தவெக அரசு 3 ரூபாய் உயர்த்தி கொடுத்துள்ளது. மேலும் விலை உயர்வு வேண்டுமென விவசாயிகள் போராட்டம் நடத்துவது ஏற்புடையதல்ல. மூன்று ரூபாய் உயர்த்தி கொடுத்தமைக்கு அரசை அணுகி அதற்கு நன்றி தெரிவித்து, மீண்டும் எங்களுக்கு விலை உயர்வு வேண்டுமென, கனிவாக கோரிக்கை வைப்பதே ஜனநாயக மரபு.

ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு பொலிரோ வாகனம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் 450 கிராமங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும். பெரும்பாலானோர் கார் கொடுப்பதை விரும்புகிறார்கள். சிலர் அதை எதிர்க்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவரின் தாத்தா அவர்கள், எல்லோருக்கும் சென்னையில் இரண்டு கிரவுண்ட் நிலம் வழங்கலாம் என கூறினார். ஆனால் அதை ஜெயலலிதா எதிர்த்தார் எனக்கூறினார்.

இதையும் படிங்க: நீங்க செஞ்சீங்களா? இபிஎஸ் vs செங்கோட்டையன்..! பரபரப்பான பேரவை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share