×
 

#BREAKING: என்கிட்ட விளக்கம் கேட்டீங்களா? அவங்களே முடிவு பண்ணிட்டாங்க... செங்கோட்டையன் ஆதங்கம்

ஜனநாயக முறைப்படி தன்னிடம் விளக்கம் கேட்டு இருக்க வேண்டும் என கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்து உள்ள நிலையில், அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்றிலிருந்து அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார்.

அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.  அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே கருத்து கூறினேன் என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைப்பு வலியுறுத்தியதாக தெரிவித்தார்.  அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளிக்கவில்லை என்றும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் செங்கோட்டையன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே கட்சியிலிருந்து நீக்கி உள்ளதாக செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். ஜனநாயக முறைப்படி தன்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார். அதிமுக நிர்வாகிகள் சிலர் தன்னிடம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதிமுக தொண்டர்களின் உணர்வைதான் நான் வெளிப்படுத்தினேன் என்றும் தெரிவித்தார். மேலும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் என்றும் திட்டவட்டமாக கூறினார். பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும் என்றும் நயினார் நாகேந்திரன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் தனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

இதையும் படிங்க: திமுகவை துரத்தனும்… எங்க நிலைப்பாடு ஒன்னு தான்! - நயினார் நாகேந்திரன்

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எண்ணத்தை யார் தான் வெளிப்படுத்துவது என்ற கேள்வி எழுப்பிய செங்கோட்டையன், ஒன்றிணைந்தால் சட்டமன்ற தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம் என அதிமுக தொண்டர்கள் நினைப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: எனக்கு HAPPY தான்! கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பரபரப்பு கருத்து

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share