அரசியலில் தலைகீழ் திருப்பம்... TVK- வில் செங்கோட்டையன்? பனையூர் வந்த தவெக தலைவர் விஜய்...!
செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் பனையூர் அலுவலகத்திற்கு விஜய் வந்தடைந்தார்.
கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்பட்டார்.
விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் செங்கோட்டையன் சென்றிருந்தார். ஏற்கனவே விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்த நிலையில் செங்கோட்டையனும் விஜயை சந்தித்தார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது. செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் விஜய்க்கு கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இளைஞர்கள் பட்டாளம் விஜய்க்கு தீவிர ஆதரவு கொடுத்து வரும் சூழலில் அரசியல் அனுபவம் வாய்ந்த ஒருவரின் வழிகாட்டுதல் இல்லை என்ற விமர்சனம் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: ஜெயலலிதா + விஜயகாந்த் பார்முலா... விஜய்க்கு ரைட் ஹேண்ட் ஆகும் செங்கோட்டையன்... மீண்டும் திரும்பும் அரசியல் வரலாறு...!
தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிமுகவை நிச்சயம் ஒருங்கிணைப்பேன் என செங்கோட்டையன் கூறிவந்த நிலையில் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது வீட்டில் இருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு விஜய் வந்தடைந்தார். செங்கோட்டையன் கட்சியில் இணையுள்ளதாக சொல்லப்படும் நிலையில் விஜய் கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! தவெக தலைவர் விஜயுடன் செங்கோட்டையன் சந்திப்பு..!