தமிழகம் இதுவரை காணாத விசில் புரட்சி நடக்கும்..! செங்கோட்டையன் திட்டவட்டம்..!
தமிழகத்தில் விசில் புரட்சியை நடக்கும் என செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் சிறப்பம்சமாக, பல ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழக அரசியல் களத்தில் புதிதாகக் களம் இறங்கிய தமிழக வெற்றிக் கழகம் மக்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜய் தலைமையில் 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல், தனித்து நின்று “வெற்றித் தமிழ்நாடு” என்ற கோஷத்துடன் மக்களை அணுகிய இந்தக் கட்சி, இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் மாற்றத்தை எதிர்பார்க்கும் பல்வேறு தரப்பினரிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தேர்தல் பிரச்சாரத்தின்போது தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் பெரும் மக்கள் திரளை ஈர்த்தன. மீன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் அட்டூழியம் தாங்கவில்லை! விஜய் கட்சியில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கிய செங்கோட்டையன்!
இந்த நிலையில், தமிழகம் பசுமை புரட்சி, வெண்மை புரட்சி இன புரட்சிகளை கண்டுள்ள நிலையில் தற்போது விசில் புரட்சி நடைபெற உள்ளது என தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியும் கோபிசெட்டிபாளையம் தொகுதியின் வேட்பாளருமான செங்கோட்டையன் கூறியுள்ளார். வரும் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று அரியணையில் அமரும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 1972 கதையை நான் பேச ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க... எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி சவால் விட்ட செங்கோட்டையன்...!