×
 

ராமதாசுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை..! OPS ஐக்கியமா? செங்கோட்டையன் பேட்டி..!

கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் மூத்த தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் இன்னும் கூட்டணியில் இணையாமல் இருப்பது கட்சியின் உள்ளக அரசியலில் தொடரும் மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடங்கிய தலைமைப் போட்டி, கட்சியின் பிளவு, அதிகாரப் போராட்டம் ஆகியவை இன்றும் தீர்க்கப்படாமல் இருப்பதால், ஓபிஎஸ் தனித்து நிற்கும் நிலை தொடர்கிறது.

அ.தி.மு.க.வில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே ஏற்பட்ட மோதல் 2017ஆம் ஆண்டு முதலே தீவிரமடைந்தது. ஜெயலலிதாவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்த ஓபிஎஸ், பலமுறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் என்ற அடிப்படையில் கட்சியில் தனது செல்வாக்கைப் பேண முயன்றார். ஆனால், இபிஎஸ் படிப்படியாக கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தன் வசமாக்கினார்.

2022இல் நடைபெற்ற பொதுக்குழுவில் இபிஎஸ் தன்னை பொதுச்செயலாளராக அறிவித்து, ஓபிஎஸ் உள்ளிட்ட எதிர்ப்பு தரப்பினரை கட்சியிலிருந்து நீக்கியது மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனால் ஓபிஎஸ் தனித்து செயல்படத் தொடங்கினார்.தற்போது 2026 தேர்தலை எதிர்கொள்ளும் சூழலில், அ.தி.மு.க. பாஜக உடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பாமகவும் இணைந்துள்ளது. இபிஎஸ் தலைமையிலான இந்தக் கூட்டணி வலுவாகத் தயாராகி வருகிறது. ஆனால், ஓபிஎஸ் இதில் இணையவில்லை. 

இதையும் படிங்க: துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட்..! வேட்டு வைக்கும் மத்திய அரசு... OPS கண்டனம்..!

இந்த நிலையில், ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடக்கிறது கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, யாருடன் கூட்டணி பேச்சு என வெளியில் கூறினாலும் டெல்லியில் இருந்து வந்து விடுவதாக விமர்சித்தார். என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு தான் தெரியும் என்றும் யாருடன் கூட்டணிப்பேச்சு என்பதை சொல்லாமல் இருப்பது தான் சரி எனவும் தெரிவித்தார். ராமதாசுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இப்போதுதான் செய்தி வந்தது என்றும் கூட்டணி விவகாரத்தில் நல்லதே நடக்கட்டும் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: திமுகவில் ஐக்கியமான வைத்திலிங்கம்..! ஒரத்தநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share