×
 

10 வருஷமா உழைக்கிறோம்… பொறுப்பு தரல… செங்கோட்டையினை முற்றுகையிட்ட தவெக தொண்டர்கள்…!

விஜய் மக்கள் இயக்கத்தில் 10 வருடமாக உழைத்து வரும் தங்களுக்கு பொறுப்பு தரவில்லை என செங்கோட்டையனை முற்றுகையிட்டு தமிழக வெற்றி கழகத்தினர் வாக்குவாதம் செய்தனர்.

தமிழக வெற்றி கழகம் கட்சியில், கட்சியின் அடிமட்ட உழைப்பாளர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வரும் ஒரு உட்கட்சி பிரச்சினையாக உள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய இக்கட்சி, 2024 பிப்ரவரியில் உருவானது முதல், ரசிகர் மன்றங்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து வருகிறது. கட்சியின் அடித்தளத்தில் பல ஆண்டுகளாக உழைத்த ரசிகர்களும், விஜய் மக்கள் இயக்கத்தில் செயல்பட்டவர்களுமே பெரும்பாலானோர்.

இவர்கள் பலர், கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த போதிலும், முக்கிய பொறுப்புகள் வெளியில் இருந்து இணைந்தவர்களுக்கோ அல்லது பணம், சாதி அடிப்படையிலோ வழங்கப்படுவதாக உணர்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டு முதன்மையாக 2025 ஆண்டில் தீவிரமடைந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது பல நிர்வாகிகள் அதிருப்தி கொண்டுள்ளனர். அவர் தனது சொந்த உருவத்தை உயர்த்துவதிலேயே கவனம் செலுத்துவதாகவும், உண்மையான உழைப்பாளர்களை புறக்கணிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கரூர் நிகழ்வுக்குப் பிறகு, சில நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட போது, அவர்கள் ஆனந்துக்கு ஆதரவாக நடந்து கொண்டதாகவும் விமர்சனங்கள் வெளியாகின. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் செங்கோட்டையனை தமிழக வெற்றி கழகத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக முக்கிய பிரமுகர்கள் தவெகவில் ஐக்கியம்... செங்கோட்டையன் உறுதி...!

வெள்ளக்கோயில் தமிழக வெற்றிக்கழக நகர அலுவலக திறப்பு விழாவிற்கு செங்கோட்டையன் சென்று இருந்தார். அப்போது விஜய் மக்கள் இயக்கத்தில் 10 ஆண்டுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கு பொறுப்பு வழங்கவில்லை எனக் கூறி தமிழக வெற்றி கழகத்தினர் செங்கோட்டையினை முற்றுகையிட்டனர். வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் பொறுப்பு வழங்கியதாக கூறி முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதையும் படிங்க: விஜய் தமிழ்நாட்டின் எதிர்காலம் என அறிந்தவர் செங்கோட்டையன்... ஆதவ் அர்ஜுனா பெருமிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share