×
 

காய் நகர்த்திய விஜய்... அவசர, அவசரமாக செந்தில் பாலாஜி எடுத்த அதிரடி முடிவு...!

தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல் டெண்டரில் முறைகேடு நடைபெற்றது, சட்டவிரோதமாக பார்கள் நடத்தப்பட்டன, மேலும் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நடவடிக்கைகள் மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகக் கூறி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 28-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில், அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட மொத்தம் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையின்படி, ஆண்டுதோறும் மதுபான விற்பனையின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரித்திருந்தபோதிலும், பார்கள் நடத்துவதற்கான டெண்டர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளில் குறைவான வருவாய் கிடைத்ததாகக் கணக்குகள் காட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொத்து கொத்தாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்... டாஸ்மாக் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு இறுகும் பிடி...!

மேலும், 45 கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் நடைமுறையில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட மதுபான பாட்டில்களை சேகரித்து மதுபான ஆலைகளுக்கு வழங்கும் பணிகளில் ரூ.143 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இதையும் படிங்க: தொடரும் ரெய்டு..! அரசியலில் பரபரப்பு... எனக்கென்ன பயம்.? செந்தில்பாலாஜி திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share