செந்தில் பாலாஜி வெற்றிக்கு ஆப்பு..? உயர்நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு..!!
செந்தில் பாலாஜியின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மிகக் குறுகலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக சுமார் 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி. செந்தில் குமாரை விட அதிக வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வாக்காளர் மனு தாக்கல் செய்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த பிரகாசம் என்ற வாக்காளர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.எம். பாபு முருகவேல் மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், செந்தில் பாலாஜி தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மற்றும் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகள் தொடர்பான தகவல்களை முழுமையாகவோ அல்லது சரியாகவோ பதிவு செய்யவில்லை என்பதாகும். இத்தகைய மறைப்பு தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என மனுதாரர் வாதிடுகிறார்.
இதையும் படிங்க: ஆட்சி கவிழ்ப்பு சதி..! சம்மனை தவிர்த்த செந்தில் பாலாஜி..! முன்ஜாமீன் கேட்டு மனு..!
மேலும், வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டபோது எழுப்பப்பட்ட ஆட்சேபனையை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்ததாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் வெற்றியை செல்லாது என்று அறிவித்து, தொகுதியில் மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்பது மனுதாரரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: அசோக்குமாரை குறிவைத்த அமலாக்கத்துறை..! "லுக் அவுட் நோட்டீஸ்"..! எதிர்மனுத் தாக்கல்..!