×
 

கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லி பறந்தார் செந்தில் பாலாஜி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை!

இன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் கொடுத்தது. அதன்படி, செந்தில் பாலாஜி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். விஜய்யிடம் 3 கட்டமாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், முதன்முறையாக செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார். 

இதையும் படிங்க: சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share