சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!
கரூர் விபத்து மற்றும் இதற்கு பின்னணியில் உள்ள சதித் திட்டங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிதான் என்று தெரிவித்துள்ளார்.
கரூர் வன்முறைச் சம்பவம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்குச் சிபிஐ (CBI) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திமுக அரசு மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை மிகக்கடுமையாகச் சாடியுள்ளார். கரூரில் நிகழ்ந்த அசம்பாவிதங்களுக்கு அதிகார பலமே காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூரில் தவெக பேரணியின் போது திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிவிட்டு, சட்டம்-ஒழுங்கு சீர்குலையக் காரணமாக இருந்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி தான். இந்த வழக்கில் சிபிஐ முதலில் விசாரணை நடத்த வேண்டிய நபரே அவர்தான். ஆனால், அவரை விட்டுவிட்டுத் தலைவர் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
தலைவர் விஜய் அவர்கள் மக்கள் செல்வாக்குடன் வளர்ந்து வருவதைத் திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 2026 தேர்தலில் தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக விஜய் இருப்பார் என்ற அச்சத்தினால், சிபிஐ மூலம் அவருக்குக் குடைச்சல் கொடுக்கின்றனர்" என நிர்மல் குமார் சாடினார்.
இதையும் படிங்க: “பாஜகவின் பிடியில் சபாநாயகர்; நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் முடக்கம்!” ஜோதிமணி எம்பி கடும் சாடல்!
விசாரணையைச் சென்னையிலேயே நடத்த அனுமதி கோரியும், அதனை மறுத்து மார்ச் 15-ல் டெல்லிக்கு வரச் சொல்வது விஜய்யின் தேர்தல் பணிகளை முடக்கும் முயற்சியாகும் என அவர் குற்றம் சாட்டினார்.
கரூரில் தவெக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது ஊர் அறிந்த ரகசியம்; இதற்கெல்லாம் தவெக அஞ்சாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
ஏற்கனவே 'கரூர் சம்பவம் செந்தில் பாலாஜி தான் செய்தார்' என ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது நிர்மல் குமாரும் அதே தொனியில் பேசியிருப்பது தவெக - திமுக இடையேயான அரசியல் மோதலை உச்சகட்டத்திற்குத் தள்ளியுள்ளது.
இதையும் படிங்க: ஊர அடிச்சு உலையில் போடும் கோபாலபுரக் குடும்பம்..! இனி எந்த ஜென்மத்துலையும் அது நடக்காது… விளாசிய நயினார்..!!