விடிந்ததுமே அதிர்ச்சி...!! - நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்... 2 பேர் பலி... இருவர் கவலைக்கிடம்...!
சேரன்மகாதேவியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலி, இருவர் கவலைக்கிடம்
சேரன்மகாதேவியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர்கள் லெட்சுமணன் மகன் சுடலைமுத்து என்ற சந்துரு (25), மாரியப்பன் மகன் லெட்சுமணன் (20). நண்பர்களான இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சேரன்மகாதேவி அருகே தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனர். சுடலைமுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை மகன் மகேஷ் (27), மானூர் பகுதியைச் சேர்ந்த ரவி செல்வராஜ் மகன் அந்தோணிராஜ் (36). ஆகிய இருவரும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த இருசக்கர வாகனத்தை மகேஷ் ஒட்டியுள்ளார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: உடுமலையில் பயங்கரம்... நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்... 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி...!
இதில், மோட்டார் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில், சுடலைமுத்து என்ற சந்த்ரு, மகேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து பலத்த காயமடைந்த மற்ற இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
இதையும் படிங்க: எமனாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து... பைக்கில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட கணவன், மனைவி பலி...!