×
 

“மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!

தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது, பவ்யலட்சுமி (34) என்ற பெண் பாலியல் புகார்.

பவ்யா லக்ஷ்மி என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் விஜய் மோகனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பவ்யா லக்ஷ்மி க்கு தனது கட்சியில் மகளிர் அணியில் பதவி பெற்று தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி பழகியுள்ளார். பின்னர் விஜய் மோகன் அந்தப் பெண்ணின் ஆபாச வீடியோக்களை ரகசியமாக எடுத்து வைத்துள்ளார். தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி, கட்டாயப்படுத்தியுள்ளார். தொடர்ந்து அவரது ஆசைக்கு இணங்க மறுத்தால், ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

தனக்கு பாலியல் அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகப் புகார் அளித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண் பவ்யா லக்ஷ்மி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில், தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் மனு அளித்துள்ளார்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் இல்லை என்றால் தற்கொலை தான் எனக்கு தீர்வா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் tvk கட்சியினருக்கு சொல்லி கொடுத்தது இதுதானா ?எனவும் இதற்கு முதல்வர் தான் பதில் சொல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின்  ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் , பவ்யலட்சுமி (34) என்ற தவெக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் விஜய் மோகன், அதே பகுதியை சேர்ந்த) பவ்யலக்ஷ்மி என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது,இதனை தொடர்ந்து பவ்யா லக்ஷ்மி க்கு தனது கட்சியில் மகளிர் அணியில் பதவி பெற்று தருவதாகவும் விஜய் மோகன் ஆசை வார்த்தைகளை கூறி பழகியுள்ளார். பின்னர், விஜய் மோகன் அந்தப் பெண்ணின் ஆபாச வீடியோக்களை ரகசியமாக எடுத்து வைத்துள்ளார். பின்னர் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி, கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

அவரது ஆசைக்கு இணங்க மறுத்தால், ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பவ்ய லக்ஷ்மி காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தார். இதை அறிந்த  விஜய் மோகன் எங்கு புகார்கள் அளித்தாலும் “தன்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்” என மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார். அவருக்கு பாதுகாப்பு வழங்கிடவும் விஜய் மோகன் மீது நடவடிக்கை எடுக்கவும் எனது வீடியோக்களை மீட்டு தரவேண்டும் எனவும் இல்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என பவ்ய லக்ஷ்மி தெரிவித்துள்ளார்

மேலும் தவெக ஆட்சி பெண் பாதுகாப்பிற்கானது என கூறிவிட்டு பெண்களுக்கு பாலியில் தொல்லை தருவதுதான் மாவட்ட செயலாளருக்கு அக்கட்சி சொல்லி கொடுத்திருக்கிறதா? எனவும் பாதிக்கப்பட்ட பெண் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு நீதி வழங்க முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பவ்ய லக்ஷ்மி கேட்டு கொண்டுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண் இப்புகாரை கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் புகார் அளிக்க தலைமை செயலகத்திற்கு சென்று புகார் அளிக்க முயற்சித்துள்ளார். அங்கு புகார் மனுவை அளிக்க முடியாததால் பின்னர் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தில் (CM Cell) சமர்ப்பிக்க முடிவு செய்து புகார் மனு அளித்துள்ளார்.மேலும் தமிழ்நாடு மகளிர் ஆணைய அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளார் .
 

இதையும் படிங்க: "முதல்வரின் காலை உணவுத் திட்டம்"..! பெயர் மாற்றம்... விஜய் அரசின் அடுத்த மூவ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share