“கேரம் போர்டு விளையாடலாம் வா...” - 10 வயது சிறுமியை சீண்டிய மிருகம்... பொளந்தெடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்...!
பெற்றோர்கள் இல்லாத நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்ரோல் பங்க் ஊழியரைப் பொதுமக்கள் வெளுத்து வாங்கிய இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சென்னை ஆசாமியை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ் (42) என்ற நபர், திருச்சி சமயபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி, அங்குள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில், அதே குடியிருப்பில் வசிக்கும் 10 வயது பெண் குழந்தையை கேரம் போர்டு விளையாடலாம்" என்று கூறி தாஸ் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு யாவரும் இல்லாத நேரத்தில் அந்தச் சிறுமியிடம் தவறான நோக்கில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வேலைக்குச் சென்றிருந்த சிறுமியின் பெற்றோர் இரவு வீடு திரும்பியதும், நடந்த கொடுமைகளை அக்குழந்தை அவர்களிடம் அழுதுகொண்டே கூறியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குற்றவாளி யார் என்று தெரியாமல் குடியிருப்பில் சத்தம் போட்டுத் திட்டிக் கொண்டிருந்தனர்.அப்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் 13 வயது சிறுமி ஒரு உண்மையை உடைத்தார். மாலை சுமார் 5 மணி அளவில், ஆட்டோ ஓட்டுநரான தனது தந்தையின் தொலைபேசி எண்ணைக் கேட்பது போல நடித்து, தன்னிடமும் அதே தாஸ் தவறான எண்ணத்தோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்தச் சிறுமி கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING அதிபயங்கரம்... கூட்டு பாலியல் தொல்லை செய்யப்பட்ட 3 வயது பச்சிளம் குழந்தை பலி...!!
மேலும், சத்தம் போட்டுக் கொண்டிருந்த 10 வயது சிறுமியின் பெற்றோரிடம், குற்றவாளி தாஸ் தான் என்பதை அந்த 13 வயது சிறுமி அடையாளம் காட்டினார். இதை அடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளின் பெற்றோர்களும், அக்கம் பக்கத்தினரும் இணைந்து தாஸை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த தாஸை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லால்குடி அனைத்து மகளிர் போலீசார் தாஸை கைது செய்தனர். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பெற்றோர்கள் இல்லாத நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்ரோல் பங்க் ஊழியரைப் பொதுமக்கள் வெளுத்து வாங்கிய இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூட்டு பாலியல் துன்புறுத்தல்?... முட்புதரில் மோசமான நிலையில் கிடந்த 3 வயது குழந்தை... வடமாநில கொடூரன் கைது...!