#BREAKING அதிபயங்கரம்... கூட்டு பாலியல் தொல்லை செய்யப்பட்ட 3 வயது பச்சிளம் குழந்தை பலி...!!
கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி புதரில் வீசப்பட்ட 3 வயது வடமாநில பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிப்காட் சுற்றுப்பகுதிகளில் பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்துவாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை செய்து வருகின்றனர்.
சிப்காட் பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் குடியிருப்பில் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொதுமக்கள் உதவியுடன் தேடினர். அப்போது இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்கள் சிலர் முட்புதரில் பச்சிளம் குழந்தை காயங்களுடன் உடல்நலம் குன்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அருகில் வசித்து வந்த இளைஞர் பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமியிடம் வடமாநில இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட குழந்தையை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதையும் படிங்க: கூட்டு பாலியல் துன்புறுத்தல்?... முட்புதரில் மோசமான நிலையில் கிடந்த 3 வயது குழந்தை... வடமாநில கொடூரன் கைது...!
இதனிடையே முட்புதரிலிருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட கொடூர செயலில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சிறுமியை ஒரே அறையில் இருந்த வட மாநில இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி 19 என்ற குற்றவாளியை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது... தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?