×
 

முடிவே இல்லையா? சிவகங்கையில் நிகழ்ந்த கொடுமை... மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்...!

சிவகங்கையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆங்கில ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது. 

இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் சமீப நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட இது போன்ற சம்பவங்கள் நீடிக்கின்றன. சிவகங்கையில் அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தனர்.

இதையும் படிங்க: விடிந்ததும் அதிர்ச்சி... சிவகங்கையில் பாஜக நிர்வாகி அடித்துக்கொலை...!

சிவகங்கை மாவட்டம் கட்டுக்குடி பட்டி பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் 51 வயதான ஆரோக்கியசாமி. இவர் அப்பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் போட்டோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். 

இதையும் படிங்க: ச்ச்சீ... ஒரு TEACHER பண்ற வேலையா இது? நெல்லையில் அதிர்ச்சி! பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share