தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம்.. 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு! பள்ளி உரிமையாளர் மகனை தட்டி தூக்கிய போலீஸ்..!
தர்மபுரியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டான்.
பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகும். இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றமாகும். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இந்த நிலையில் தர்மபுரியில் பள்ளி உரிமையாளரின் மகன் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கண்மலர் - நடராஜ் எனும் தம்பதி இந்த பள்ளியை நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் வினு லோகேஸ்வரன். இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு வினு லோகேஸ்வரன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் செய்வதறியாது பயந்து போன மாணவி இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. என்ன ஆனது., எதற்காக பள்ளிக்கு செல்லவில்லை என்று பெற்றோர் கேட்டபோது பள்ளி உரிமையாளரின் மகன் தனக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிரிக்கெட்ல பெரிய ஆளா ஆக்குறேன்னு சொன்னாரு! சிறுமியை சிதைத்த ஆர்.சி.பி வீரர்.. பாய்ந்தது போக்சோ!!
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் வினு லோகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். போச்சோ சட்டத்தின் கீழ் பெண்ணாகரம் மகளிர் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடும் ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை... பிளேடை வைத்து கிழித்த பயங்கரம்!..