#BREAKING: எம்.எல்.ஏ தோட்டத்தில் எஸ்.ஐ கொடூர கொலை.. ஒரு கோடி நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு..!
திருப்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சண்முகவேல். இவர் வழக்கம் போல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
11.30 மணி அளவில் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் தந்தை மகனிடையே சண்டை நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதன் பேரில் சண்டை நடைபெறுவதாக கூறப்பட்ட இடத்திற்கு எஸ் ஐ சண்முகவேல் மற்றும் அவருடன் மேலும் ஒரு காவலர் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வருடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு... தமிழக அரசியலில் பரபரப்பு!
மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட நபர்களை எஸ் ஐ சண்முகவேல் கண்டித்து சண்டையை நிறுத்தியதாக சொல்லப்படும் நிலையில் திடீரென அங்கிருந்த கும்பல் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சரிந்த எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். எம்எல்ஏ அளித்த தகவலின் பேரில் தான் எஸ் ஐ சண்முகவேல் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சண்முகவேல் கொலை சம்பவம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏவிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வெட்டி கொலை செய்யப்பட்ட குடிமங்கலம் சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எஸ். ஐ சண்முகவேலின் உயிரிழப்பு காவல்துறைக்கு பெரும் பேரிழப்பு என்று வேதனை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலினின் பயணம்.. எதுக்கு போறாரு தெரியுமா? முழு விவரம்..!