×
 

#BREAKING: SSI சண்முகவேல் கொடூரக் கொலை சம்பவம்… 2 பேர் போலீசில் சரண்!

திருப்பூரில் சிறப்பு காவல் ஆய்வாளர் வெட்டிக்கொள்ளப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் சரணடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சண்முகவேல். இவர் வழக்கம் போல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். 11.30 மணி அளவில் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

அதில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் தந்தை மகனிடையே சண்டை நடப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் பேரில் சண்டை நடைபெறுவதாக கூறப்பட்ட இடத்திற்கு எஸ் ஐ சண்முகவேல் மற்றும் அவருடன் மேலும் ஒரு காவலர் சென்றதாக கூறப்படுகிறது.

மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட நபர்களை எஸ் ஐ சண்முகவேல் கண்டித்து சண்டையை நிறுத்தியதாக சொல்லப்படும் நிலையில் திடீரென அங்கிருந்த கும்பல் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரிந்த எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: எம்.எல்.ஏ தோட்டத்தில் எஸ்.ஐ கொடூர கொலை.. ஒரு கோடி நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு..!

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான பின்னணி தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கொலையாளிகள் இருவரின் செல்போன்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

தலைமுறைவாக இருந்த கொலையாளிகள் மூன்று பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், இரண்டு பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர்.

SSI கொல்லப்பட்ட விவகாரத்தில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் சரணடைந்துள்ளனர். மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் தலைமுறைவாக உள்ள நிலையில் அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அன்புமணி தலைவரே கிடையாது! பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் மனு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share