சிந்தாமணி பயங்கரம்... இன்று வெளியாகிறது தீர்ப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!
சிந்தாமணி பயங்கர சம்பவத்தின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் ஒரு மாபெரும் திருவிழா. இந்த திருவிழாவின் போது நிகழ்ந்த சம்பவம் இன்றும் நீங்காத அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 105வது ஜெயந்தி மற்றும் 50வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க ஏராளமானோர் பசும்பொன்னுக்கு சென்றனர்.
விழா முடிந்து திரும்பியவர்களில் ஒரு குழு, மதுரை அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் இரவு சுமார் 9 மணியளவில் கொடூரமான தாக்குதலுக்கு ஆளானது. இந்தக் குழு பசும்பொன்னிலிருந்து வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தது. அவர்கள் மதுரை நோக்கிச் சென்றபோது, அடையாளம் தெரியாத ஒரு கும்பல் திடீரென வாகனத்தைச் சுற்றி வளைத்து தாக்குதலைத் தொடங்கியது. அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு SPY வேலை பார்த்த இந்திய விமானப்படை வீரர்..!! தட்டித்தூக்கிய அதிகாரிகள்..!!
வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. வாகனத்தில் இருந்தவர்களில் சிலர் உடனடியாக தீயில் சிக்கி உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வழக்கில் தொடர்புடைய 9 நபர்களில், தற்போது 7 நபர்கள் கரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளனர். இன்று பகல் 12:00 மணிக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள்..? பிரேமலதா தலைமையில் மா.செ. கூட்டம் தொடக்கம்..!!