ஸ்டார்ட் அப் தமிழ்நாடு தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமனம்! தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (TANSIM) தலைவராக சிங்கை ஜி. ராமச்சந்திரனை நியமித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.
அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்து, அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ஜி.ராமச்சந்திரன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் கண்டுபிடிப்பு இயக்கத்தின் (TANSIM - Startup Tamil Nadu) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணையில் (G.O. (2D) No.21), கோயம்புத்தூரைச் சேர்ந்த சிங்கை ஜி.ராமச்சந்திரனை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் கண்டுபிடிப்பு இயக்கத்தின் (TANSIM) புதிய தலைவராக நியமித்து ஆளுநரின் பெயரில் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கான சேவை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த விரிவான விவரங்கள் விரைவில் தனியாக வெளியிடப்படும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேவதை பட்டம் வேண்டாம்; சம உரிமை கொடுங்கள்! சென்னை மாநகராட்சியில் 14வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
ஐஐஎம் அகமதாபாத் கல்வி நிறுவனத்தில் பயின்ற தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பப் பின்னணி கொண்ட சிங்கை ஜி.ராமச்சந்திரன், அதிமுக ஐடி விங் மாநில செயலாளராகப் பணியாற்றியவர். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், தமிழகத்தின் தொழில்முனைவோர் சூழலியலை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் நோக்கில் செயல்பட்டு வரும் மிக முக்கிய அரசு நிறுவனமான ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ அமைப்பின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் தொழில்முனைவோர் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: வரி வசூல் சரிவு.! வருவாய் வளர்ச்சிக்கு என்ன வழி.? தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி..!!