×
 

இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாடுகளை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் தலைமையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படை பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மையப்படுத்தி செயல்படும் சிறப்பு அமைப்பாக அமைக்கப்பட்டு, முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இயங்குகிறது. இதன் தலைமைப் பொறுப்பில் ஐஜி பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிரடிப்படை தமிழகம் முழுவதும் பரவலாகச் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முக்கியமாக பொது இடங்களில் தீவிரமான கண்காணிப்புப் பணிகளையும் சுற்றுக்காவல் பணிகளையும் மேற்கொள்கிறது. நகர்ப்புறங்கள், கிராமப்புறங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொழுதுபோக்கு இடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்தப் படையினர் தொடர்ச்சியாக ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

இதன் மூலம் பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக உணரும் சூழலை உருவாக்குகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் இந்தப் படை முக்கியப் பங்கு வகிக்கிறது. தெருக்களில், பொதுப் போக்குவரத்து இடங்களில் அல்லது கூட்டமான பகுதிகளில் ஏதேனும் தொல்லை அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவானால் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பிரத்யேக ஜீப், சிறப்பு சீருடை... கம்பீர நடையுடன் சிங்கப்பெண் படை திட்டம்..! நாளை அறிமுகம்..!!

இந்த அதிரடிப்படையினர் சட்டத்தின் முழு அதிகாரத்துடன் செயல்படும் திறனைப் பெற்றுள்ளதால், குற்றச் செயல்கள் நடைபெறும் முன்பே தடுக்க முடிகிறது. குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இந்தப் படையின் முக்கியப் பணியாகும். உளவுத்துறை தகவல்கள், பொதுமக்கள் புகார்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு முறைகளின் உதவியுடன் ஆபத்தான இடங்களை அடையாளம் கண்டு அங்கு தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பை அதிகரிக்கிறது. இதனால் குற்றச் சம்பவங்கள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: வீட்டை விற்க மறுத்த ஓனர்! அடித்தே கொலை செய்த வாடகை தம்பதி! சிசிடிவி சிக்கிய பின்னணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share