×
 
☰

#BREAKING மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... தமிழகத்தில் இனி வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள்... சிங்கப்பெண் சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்...!

தமிழகத்தில் வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தெந்த நாட்களில் நடைபெறும்? என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் தகுதியான பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று, பல்வேறு வகையான கடன்களைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் கடன் திட்டம்: 

தமிழகக் கூட்டுறவுத் துறையின் சார்பில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கடன் வழங்குவதற்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, விவசாயக் கடன்கள், ஊரகத் தொழில் கடன்கள், வீட்டுவசதிக் கடன்கள், வீட்டு அடமானக் கடன்கள், கால்நடை வளர்ப்புக்கான கடன்கள், திருநங்கைகளுக்கான கடன்கள், மின் ஆட்டோ கடன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விடிந்ததும் தமிழகமே பரபரப்பு... வீட்டுக்காவலில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்... நடந்தது என்ன?

இதற்காக, அந்தந்தப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்தக் கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.

எந்தெந்த நாட்களில் கடன் முகாம்கள் நடைபெறும்?

கூட்டுறவுத் துறையின் அறிவிப்பின்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்புக் கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

  • செவ்வாய்க்கிழமை: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் வீட்டுவசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

  • வெள்ளிக்கிழமை: இதர முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இந்த முகாம்கள் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு உரிய கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக இந்தக் கடன் மேளாக்கள் நடத்தப்பட்டு, அவற்றின் பயன்கள் பொதுமக்களைச் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்படும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

கடன் பெற விரும்பும் தகுதியான பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான கடன் வகைக்கு ஏற்ப உரிய ஆவணங்களுடன் முகாம்களில் பங்கேற்கலாம்.

முக்கியமாக, ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும். விண்ணப்பிக்கும் கடன் வகையைப் பொறுத்து கூடுதல் ஆவணங்களும் தேவைப்படலாம்.

தொடர்பு எண் அறிவிப்பு:

சிறப்புக் கடன் முகாம்கள் நடைபெறும் இடம், கடன் வகைகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்து கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக 9884000845 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற விரும்பும் தகுதியான பொதுமக்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்புக் கடன் முகாம்கள் குறித்த விவரங்களை அறிந்துகொண்டு, உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

இதையும் படிங்க: ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share