SIR... புதிய வாக்காளர்களுக்கு சிக்கல்.. மாட்டுனா ஜெயில் தானாம்...!
எஸ் ஐ ஆர் மூலம் புதிய வாக்காளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் மற்றும் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதிய வாக்காளர்களுக்கு எஸ் ஐ ஆர் மூலம் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரைவு வாக்காளர் பட்டியல்... பெயர் சேர்க்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் தகவல்...!
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், 2002 அல்லது 2005 SIR பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் அல்லது உறவினர்களின் விவரங்களை தெரிவிப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல் அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ள நிலையில் கடும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: SIR ல் குளறுபடி..? மறைந்த பாடலாசிரியர் புலமைப்பித்தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததால் அதிர்ச்சி...!