விறுவிறு SIR… வெளிநாட்டு வாக்காளர் வகைப்பாட்டில் பிரச்சனை… அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை…!
Sir பணியில் அவசர கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் டிஆர்பி ராஜா வலியுறுத்தினார்.
தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்காளர் திருத்த பணிகளில் அவசர கவனம் செலுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அமைச்சர் டிஆர்பி ராஜா வலியுறுத்தியுள்ளார். SIR-க்கான செயல்முறை குறித்து அயல்நாட்டு தமிழர்களுக்கு சிறந்த தெளிவு தேவை என்று குறிப்பிட்டார். NRI-களுக்கான குறிப்பிட்ட அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறித்த ஒரு தனித் தகவல்தொடர்பு கிளிப் உட்பட வெளியிடப்படலாம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் SIR… தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்... ஸ்தம்பித்த சென்னை...!
உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் நமது NRT-களைத் முன்கூட்டியே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் மேலும் உலகம் முழுவதும் உள்ள எங்கள் வசதிகளில் முகாம்களை நடத்தவும் வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். புலம்பெயர்ந்தோர் நிகழ்வுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படலாம் என அவர் கூறினார். சர்வதேச எண்களைக் கொண்ட அவர்களில் பலருக்கு OTP-களைப் பெற முடியாமல் போகலாம் என்றும் குறிப்பாக இந்திய வெளிநாட்டு வாக்காளர் வகைப்பாடு போன்றவற்றுடன் பல பதிவு சிக்கல்கள் தெரிவிக்கப்படுகின்றன என்றும் அதே நேரத்தில் நமது BDA-க்களும் முடிந்தவரை உதவ முயற்சிக்கின்றன எனவும் கூறினார்.
இதையும் படிங்க: போலி வாக்குகளை செருகுவதில் திமுக தீவிரம்... தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...!