×
 

போலி வாக்குகளை செருகுவதில் திமுக தீவிரம்... தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்...!

எஸ் ஐ ஆர் விவகாரத்தில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிமுக மூத்த தலைவர் ஆதிராஜாராம் கூறுகையில், திமுக SIR செயல்பாட்டில் உள்ள அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறது. திமுகவின் முறைகேட்டை நாங்கள் தடுக்க முயற்சிக்கிறோம், ஆனால் அவர்கள் அரசாங்க அதிகாரத்தையும் பண பலத்தையும் பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.

இதுபோன்ற நடைமுறைகளில் ஈடுபடும் திமுக மீது நடவடிக்கை எடுக்க இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தோம் என்று தெரிவித்தார். SIR-ஐ எதிர்த்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், SIR செயல்முறைக்கு மிகக் குறைந்த நேரமே வழங்கப்பட்டதாகக் கூறினார். முரண்பாடு இருந்தபோதிலும், அவரது கட்சி அதிகாரிகளான தனது சொந்த கட்சி உறுப்பினர்களை நியமிக்க முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் SIR செயல்பாட்டில் அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. சென்னையில் SIR செயல்முறை மூலம் போலி வாக்குகளைச் செருகுவதிலும், மற்ற கட்சிகளின் வாக்குகளை நீக்குவதிலும் திமுக ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். இது குறித்த தகவல் எங்கிருந்து கிடைத்தாலும், அதைத் தடுக்க முயற்சிக்கிறோம், ஆனால் அவர்கள் எங்களைக் குறைக்க தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். SIR-ன் செயல்முறையை அழிக்க திமுக முயற்சிக்கிறது என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். 

இதையும் படிங்க: புலி வருது, புலி வருது..! இதே கதைதான்... முதலீடுகள் தொடர்பாக முதல்வரை விளாசிய நயினார்...!

இதையும் படிங்க: இன்னும் அஞ்சு மாசம் தான் முதல்வரே! இனியும் பொருத்துக்க முடியாது… பூந்து விளாசிய அண்ணாமலை…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share