#BREAKING: முதல்வர் ஸ்டாலினின் சொந்தத் தொகுதியில் 1 லட்சம் பேர் நீக்கம்…முக்கிய அறிவிப்பு…!
தமிழகத்தில் 36 மாவட்டங்களில் இதுவரை 92 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடைபெற்றது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இடையே வாக்காளர் திருத்த பணிகள் நடந்து முடிந்தது. வாக்காளர் திருத்தம் படிவங்களை கொடுக்க மூன்று நாட்கள் கூடுதல் அவகாசமும் வழங்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 36 மாவட்டங்களில் 92 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 வாக்காளர்கள் 16 தொகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 521 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..! முழு விவரம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் 1,03,812 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 16 தொகுதிகளில் மட்டும் 14,25,018 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இன்று வரைவு வாக்காளர் பட்டியல் நீக்கப்பட்டுள்ள நிலையில் இறந்தவர், இடம் பெயர்ந்தவர், இரட்டை பதிவு என மொத்தமாக சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ் ஐ ஆர் பணிக்கு முன்பு 40 லட்சத்து 4 ஆயிரம் வாக்காளர்கள் இருந்த நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு பிறகு 25 லட்சத்து 79 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை… முழு விவரம்..!