×
 

#BREAKING: சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..! முழு விவரம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

சென்னையில் 16 தொகுதிகளில் மட்டும் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு என்பது, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் எனும் செயல்முறையின் முக்கியமான ஒரு கட்டம். இந்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியலைத் துல்லியமாக்குவதற்காக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், கண்டறிய முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்படும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டன.இந்தச் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று வரை வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்கள் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் முழுவிவரத்தை வெளியிடுகிறார். வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளைச் சரிசெய்யவும், தகுதியுள்ள புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வரைவுப் பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான eci.gov.in அல்லது தமிழ்நாடு தேர்தல் துறையின் இணையதளமான elections.tn.gov.in ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் தேடலாம். மேலும், உள்ளூர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி மையங்களிலோ ஆஃப்லைன் முறையிலும் சரிபார்க்க முடியும். 

இதையும் படிங்க: #BREAKING: வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை… முழு விவரம்..!

சென்னையில் 16 தொகுதிகளில் மட்டும் 14,25,018 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இன்று வரைவு வாக்காளர் பட்டியல் நீக்கப்பட்டுள்ள நிலையில் இறந்தவர், இடம் பெயர்ந்தவர், இரட்டை பதிவு என மொத்தமாக சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ் ஐ ஆர் பணிக்கு முன்பு 40 லட்சத்து 4 ஆயிரம் வாக்காளர்கள் இருந்த நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு பிறகு 25 லட்சத்து 79 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர். 

சென்னையில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 47 ஆயிரத்து 690. 

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 31 ஆயிரத்து 243.

இதர பிரிவு 743

அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 2,181 வாக்காளர்கள் இருக்கின்றனர். குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 573 வாக்காளர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: #BREAKING: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share