×
 

என் பிள்ளைய அனாதை பிணம் போல வெச்சிருக்காங்க! 7 வயது சிறுவன் மர்ம மரணம்.. கதறும் பெற்றோர்!

சிவகங்கை மாவட்டத்தில் சிபிஎஸ்சி பள்ளியில் படிக்கும் ஏழு வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிபிஎஸ்சி பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். என்ன ஆனது என பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் கூறாத நிலையில், பெற்றோர் நீதி கேட்டு கதறி அழுதனர். தன் பிள்ளை சடலம் அனாதை போல கிடந்ததாகவும், யாருமே பக்கத்தில் இல்லை என்றும் வேதனையுடன் கூறினர். அதுமட்டுமல்லாமல் செல்போன் அழைப்புகளை கூட பள்ளி நிர்வாகம் துண்டித்து இருப்பதாக கூறுகின்றனர் பெற்றோர்.

சிவகங்கை மாவட்டம் மதுராபுரி வேங்கைபட்டியை சேர்ந்தவர் 7 வயது சிறுவன் அஸ்விந்த். இவர் சிங்கம்புணரியில் உள்ள சிபிஎஸ்சி பள்ளியில் படித்து வந்தார். அடக்கம் போல் சிறுவன் அஸ்விந்தை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் தங்களது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்து போது அஸ்விந்த் சடலமாக இருப்பதை பார்த்து கதறி துடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக கூறினர்.

இதையும் படிங்க: அப்பா ஸ்டாலின்.. அடுத்த உயிர் போறதுக்குள்ள எதையாச்சும் செய்யுங்க! கிழித்து தொங்கவிட்ட நயினார்..!

இதனை அடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியின் பேருந்து ஓட்டுனர் மூலம் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. வாயிலும் மூக்கிலும் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்ததாகவும், அருகில் யாருமே இல்லை என்றும் பெற்றோர் வேதனையுடன் கதறி அழுதனர். 

இதையும் படிங்க: +1 மாணவி தற்கொலை முயற்சி! மன அழுத்தமா? போலீஸ் தீவிர விசாரணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share