×
 

எங்க பையன் எப்படி செத்தான்? சிறுவனின் மர்ம மரணம்! சிவகங்கையில் பதற்றம்.. போலீசார் குவிப்பு..!

சிங்கம்புணரியில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் பயின்று வந்த 7 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மதுராபுரி வேங்கைபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவரின் மகன் 7 வயது சிறுவன் அஸ்விந்த். இவர் சிங்கம்புணரியில் உள்ள சிபிஎஸ்சி பள்ளியில் படித்து வந்தார். வழக்கம் போல் சிறுவன் அஸ்விந்தை பெற்றோர் நேற்று பள்ளிக்கு அனுப்பினர். இந்த நிலையில் தங்களது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்து போது அஸ்விந்த் சடலமாக இருப்பதை பார்த்து கதறி துடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக கூறியிருந்தனர். இதனை அடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிறுவன் உயிர் இழப்பு தொடர்பாக விசாரித்து வருகின்றனர். வாயிலும் மூக்கிலும் ரத்தம் வடிந்த நிலையில் தங்கள் மகன் சடலமாக கிடந்ததாகவும், அருகில் யாருமே இல்லை என்றும் பெற்றோர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: என் பிள்ளைய அனாதை பிணம் போல வெச்சிருக்காங்க! 7 வயது சிறுவன் மர்ம மரணம்.. கதறும் பெற்றோர்!

முன்னதாக பெற்றோருக்கு முறையாக பதில் அளிக்காத நிலையில், வலிப்பு ஏற்பட்ட சிறுவன் உயிர் இழந்து விட்டதாக பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. சிறுவனை பள்ளியின் கார் ஓட்டுநர் அரசு மருத்துவமனைகள் அனுமதித்து விட்டு ஓட்டம் பிடித்ததாகவும், பெற்றோருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் சிறுவனை மருத்துவமனையில் போட்டுவிட்டு ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் ஐந்து மணி நேரத்திற்கு முன்பு உயிர் இழந்து விட்டதாக கூறப்படும் நிலையில், என்ன நடந்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 மாணவனின் பெற்றோர் உறவினர்கள் நள்ளிரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளியின் தாளாளர் சங்கரநாராயணன், ஓட்டுநர் ஜான் பீட்டர், தாளாளர் மகன் மகேஷ் குமார் ஆகியோர் மீது சிறுவனின் தந்தை பாலமுருகன் புகார் அளித்த நிலையில் சிங்கம்புணரி போலீசார் வடக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் பலியானது குறித்து விசாரணை நடைபெறும் நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, பள்ளி வாசலில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவனின் மரணத்தில் மர்மம் நீடித்து வருவதால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அப்பா ஸ்டாலின்.. அடுத்த உயிர் போறதுக்குள்ள எதையாச்சும் செய்யுங்க! கிழித்து தொங்கவிட்ட நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share