×
 

கல்குவாரியில் தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி... கதறும் குடும்பத்தினர்!

சிவகங்கையில் கல்குவாரியில் பாறை சரிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மல்லாக் கோட்டையில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. தனியாருக்கு சொந்தமான 450 அடி ஆழ குவாரியில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் வெடி வைத்து பாறையை தகர்த்தபோது திடீரென பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளை சிக்கினர். இதில் உடல் நசுங்கி ஐந்து தொழிலாளர்கள் பரிதாபமாக௨ உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளை சிக்கி உள்ளதால் உறவினர்கள் கதறி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோடையில் மிரட்டும் கனமழை... தென்பண்ணையில் வெள்ளப்பெருக்கு! மக்களே உஷார்!

கற்கள் சரிந்து உள்ளே சிக்கியுள்ளவர்களின் நிலைமை குறித்து இன்னும் தெரியாததால் உறவினர்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். கடுமையான இடிபாடு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுவதால் குவாரி வாயிலில் உறவினர்கள் குவிந்துள்ளனர்.

இதையும் படிங்க: 2025ல் தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் எவ்வளவு தெரியுமா? டிஜிபி சங்கர் ஜிவால் பகீர் தகவல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share