#BREAKING: சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து..! வெடித்து சிதறும் பட்டாசுகள்... நெருங்க முடியாமல் மீட்பு பணிகளில் தொய்வு..!
சிவகாசியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவகாசியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க முடியாமல் தவித்து வருகின்றனர். சிவகாசி அருகே கோப்பை நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. குரு லட்சுமி பட்டாசு ஆலைகள் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. பட்டாசு ஆளையின் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து தரைமட்டமாகியுள்ளன.
தொழிலாளர்கள் பலர் ஆலையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் யாரும் இதுவரை மீட்கப்படாத நிலையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்குள் சிக்கி இருக்கும் சூழ்நிலையில் யாரையும் இதுவரை மீட்க முடியாமல் மீட்பு பணிகளில் தொய்வு நிலவுகிறது. தீக்காயம் பட்ட தொழிலாளர்களை இதுவரை மீட்க முடியாத சூழ்நிலை நிலவுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறி வருகின்றன. பட்டாசு ஆலை அமைந்துள்ள பகுதியில் அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு வெடி விபத்து நிகழ்ந்திருப்பது சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் ரத்த வெறி... தந்தை-மகன் கொடூரக் கொலை..! தலையை வெட்டி நடுரோட்டில் வைத்து சென்ற மர்ம கும்பல்..!!
தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர். இருப்பினும் தொழிற்சாலைக்குள் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவகாசி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து இது போன்ற வெடி விபத்து சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க முயற்சிகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: தவெகவில் மீண்டும் அதிரடி... 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!