சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து... தீயை அணைக்க போராடும் வீரர்கள்...!
சிவகாசி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவகாசி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், மற்றும் கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய பட்டாசு தீப்பெட்டி ஆலைகள் செயல்படுகின்றன. குறிப்பாக சிவகாசி இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது, இதனால் இந்நகரம் இந்தியாவின் பட்டாசு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பட்டாசு ஆலைகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பணிபுரிகின்றார்கள் பட்டாசுத் தொழிலில் ஆபத்தான வெடி மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பல கட்டுப்பாடுகள் உண்டு. இந்த சிறிய அறைகளை 10 லட்சம் வரையில் குத்தகைக்கு எடுத்து தொழில் செய்யும் சிறிய தொழில் முனைவோரால் குந்தவைக்குக் கொடுத்த பத்து லட்சத்தைத் திரும்ப எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதால் விதிமுறைகளை மீறி பயிற்சி அற்றவர்களையும், 4 பேர் பணிபுரிய வேண்டிய அறையில் 20 பேர் வரையும் இத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள்.
இதையும் படிங்க: சரிதான்... திருமாவுக்கு உடனடியா பாதுகாப்பு கொடுங்க... M.P. கமல்ஹாசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்...!
பயிற்சி அற்றவர்கள் செய்யும் தவறுகளும், சிறிய அறைகளில் பன்மடங்கு பணியாளர்கள் பணி செய்வதும் எளிதாக விபத்து ஏற்படுவதற்கும், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் காரணமாகி விடுகிறது.
இந்த நிலையில், சிவகாசி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்கள் பலரும் உள்ளே சிக்கியுள்ளதால் அச்சம் ஏற்பட்டு உள்ளது. வெடிகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் அருகே செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விசாரணை நிறைவு... மீண்டும் சிறையில் அடைக்கப்படும் தவெக நிர்வாகி மதியழகன்...!