×
 

சரிதான்... திருமாவுக்கு உடனடியா பாதுகாப்பு கொடுங்க... M.P. கமல்ஹாசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்...!

திருமாவளவனுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கார் வழிமறிக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பியது. இது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் 7 அன்று தனது காரை வழிமறித்த நிகழ்வு தற்செயலாக நடந்தது அல்ல என்றும் திட்டமிட்டசதி என்பது தெரிய வருவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் விசாரணையில் உறுதிபட தெரிவதாகவும் குறிப்பிட்டார். எனவே, தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும் என்றும் பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார். திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இயக்குனர் பா. ரஞ்சித் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய கரூர் கோரச் சம்பவம்… நிவாரணத் தொகை வழங்கிய திருமா…!

திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது என்றும் பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது எனவும் கூறினார். திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். மேலும் திருமாவளவனின் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜயுடன் கைகோர்க்கும் இபிஎஸ்… அப்ப அதுக்கு ரெடியா? திருமா சரமாரி கேள்வி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share