×
 

தமிழகமே பரபரப்பு... சிவகாசியில் விடிய, விடிய தொடரும் சோதனை... கட்டுக்கட்டாக சிக்கிய ஆவணங்கள்...!

பட்டாசு உற்பத்தியாளர்களின் தலைமை அலுவலகங்கள், வீடுகள் மற்றும் லாரி செட் நிறுவனங்களிலும்  வருமான வரித்துறையினர் 2-வது நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு உற்பத்தியாளர்களின் தலைமை அலுவலகங்கள், வீடுகள் மற்றும் லாரி செட் நிறுவனங்களிலும்  வருமான வரித்துறையினர் 2-வது நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். விடிய விடிய நடந்த சோதனையில்  கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளன. 

 சிவகாசியில் பிரபல பட்டாசு தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகங்கள், பட்டாசு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசியிலிருந்து வருடம் தோறும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான பட்டாசுகள் லாரி செட் நிறுவனங்கள் மூலமாக நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனையாகிறது.

இதில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு  வரி எய்ப்பு  தொடர்கதையாக நடப்பதாக வருமான வரித்துறை மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்தது. அதனடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை உயரதிகாரிகளும், அலுவலர்களும் சிவகாசியில் முகாமிட்டு நேற்று பகல் முழுவதும் அலுவலகங்களின் பல்வேறு பகுதிகள், வீடுகளின் தோட்டங்கள், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சம்பளம் வேணுமா? இந்தா வாங்கிக்கோ... ஊழியர்களை பெல்டில் விளாசிய முதலாளி

பட்டாசுத் தொழிற்சாலையின் தலைமை அலுவலகங்களில் மட்டும் இரவு முழுவதும் விடிய விடிய சோதனை நடத்தப்பட்ட பட்சத்தில், 2-வது நாளாக மீண்டும் நேற்று நடந்த அனைத்து இடங்களிலும் இன்றும் வருமான வரி துறையினரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கட்டுக் கட்டாக சிக்கியதாக தெரிகிறது.

இதையும் படிங்க: கொங்கு மண்டல மக்களுக்கு விரைவில் வருகிறது குட்நியூஸ்... மத்திய அரசு சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share