×
 
☰

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பேரிடி... மின்வாரியம் வெளியிட்ட ‘பகீர்’ அறிவிப்பு...!

ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தினால் யூனிட்டுக்கு ₹16 முதல் ₹30 வரை செலவு அதிகரிக்கும் என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மிழ்நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டுத் தேவையை சமாளிக்கும் வகையில், உயர் மின்னழுத்த மின்நுகர்வோர் இரவு 7 மணி முதல் 10 மணி வரை தங்களது சொந்த ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக மின்வாரிய அதிகாரிகள் இந்தத் தகவலை தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பி வருகின்றனர். மின்வாரியத்தின் இந்த அறிவிப்பு உற்பத்தித் தொழில் துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7 ஆக இருக்கும் நிலையில், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தினால் யூனிட்டுக்கு ரூ.16 முதல் ரூ.30 வரை செலவு அதிகரிக்கும் என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே பல்வேறு காரணங்களால் மூலப்பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்த நிலையில், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதால் கூடுதல் செலவீனம் ஏற்படும் எனவும், இது உற்பத்திச் செலவை உயர்த்தி தொழில் துறையை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மின் கணக்கீடு பணியில் தனியாரை ஈடுபடுத்தலாமா..? விஜய் அரசு முடிவை கைவிட வேண்டும்... திருமா. வலியுறுத்தல்..!!

“அரசாங்கம் வந்துவிட்டு இப்போது நிறைய பவர் கட் அதிகமாக வந்துகொண்டிருப்பதால், ஜெனரேட்டரை உபயோகப்படுத்துமாறு சொல்லியிருக்கிறார்கள். அதாவது, பீக் அவர்ஸில் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி பயன்படுத்தி கொஞ்சம் கரண்ட்டை குறைக்கலாம் என்ற மாதிரி சொல்லியிருக்கிறார்கள்.

ஏன்னா, கிட்டத்தட்ட 2,000 மெகாவாட் பக்கம் அவர்களுடைய புரொடக்ஷன் குறைந்திருக்கிறது. மற்ற ஆறு முறை பவர் கட் ஆகியிருக்கிறது. அதனால் எங்களுக்கு நார்மல் அவர்ஸிலேயே பவர் கட் ஆகிறது. அப்படி இருக்கும்போது பீக் அவர்ஸில் கண்டிப்பாக ஜெனரேட்டர்தான் ஓட்டி ஆக வேண்டும்.

அப்போது ஜெனரேட்டர் எல்லா பக்கமும் ஓட்டிக்கொண்டிருந்தால் எங்களுக்கு எவ்வளவு லாஸ் ஆகும் என்றால், நிறைய பயங்கர லாஸ் ஆகும். கிட்டத்தட்ட பவர் காஸ்ட்டைவிட இரண்டு மடங்கு அதிகமாக ஆகும். அப்போது ரொம்ப பாதிக்கப்படுவோம்.

இப்போது ஏற்கனவே மூலப்பொருட்களின் விலை ரொம்ப அதிகமாகிவிட்டது. இப்போது எல்லாமே விலை அதிகமாகிக்கொண்டே போகிறது. எல்லா விலையும் அதிகமாகும்போது, இப்போது இதுவும் அதிகமாகும்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. சிறு, குறு தொழில்கள் ரொம்ப சிரமத்துக்கு உள்ளாகும்.”

எனவே, உற்பத்தியாளர்களைப் பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசு தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும் என்றும், வெளியிலிருந்து மின்சாரம் வாங்கும் நடவடிக்கையைத் துரிதமாக செயல்படுத்த வேண்டும் எனவும் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வேலையின்றி இளைஞர்கள் அவதி..! மின்கணக்கீடு தனியாருக்கா.? தவெக அரசின் முடிவுக்கு வேல்முருகன் எதிர்ப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share