×
 

பயணிகளின் கனிவான கவனத்துக்கு... தீபாவளி சிறப்பு ரயில்கள் ரத்து... எவை எவை? முழு லிஸ்ட்....!

ஊர் திரும்புவோருக்கு பேரதிர்ச்சி தரும் வகையிலான செய்தி ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. இந்த பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்பவர்களுக்காக தெற்கு ரயில்வே மொத்தம் 60 சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது. இந்த சிறப்பு ரயில்களில் சொந்த ஊருக்குச் சென்று தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய லட்சக்கணக்கான மக்கள் இன்று மீண்டும் தாங்கள் பணிபுரியும் அல்லது வசித்து வரும் ஊர்களுக்கு திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர். 

மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடிவிட்டு, மீண்டும் திரும்புவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு, தீபாவளி மறுநாளான அக்டோபர் 21ஆம் தேதியையும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஊர் திரும்புவோருக்கு பேரதிர்ச்சி தரும் வகையிலான செய்தி ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. 

முன்பதிவு குறைவாக இருப்பதால் தீபாவளி சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகள் திரும்புவதற்கு ஏதுவாக பல்வேறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் முன்பதிவு குறைவாக இருப்பதால் 22 முதல் 29 ஆம் தேதி வரை இயக்கப்பட்ட இருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க: உஷாரய்யா.. உஷாராரு... காலையிலேயே 17 மாவட்டங்களுக்கு வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

அக்டோபர் 22ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டையம் செல்லும் 06121 சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கமான கோட்டையத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த ரயில் எண் 06122-ம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து 28 ஆம் தேதி சென்னைக்கு இயக்கப்படவிருந்த 06054 விரைவு ரயிலும் மற்றும் 29 ஆம் தேதி மறுமார்க்கமாக சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் 06054 விரைவு ரயிலும் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அக்டோபர் 24 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில் செங்கல்பட்டு – திருநெல்வேலி அதிவிரைவு ரயிலான 06153 ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கமான திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இயக்கப்பட இருந்த அதிவிரைவு ரயிலான 06154-ம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அதிரடி திருப்பம்... முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share