ஜாக்பாட்..!! கோப்பை, பதக்கம், ரொக்கப் பரிசு..! முதலமைச்சர் கோப்பைக்கான பரிசுகள்..! CM விஜய் பங்கேற்பு..!
முதலமைச்சர் கோப்பைக்கான பரிசு வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டும் மாபெரும் அளவில் நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் முதலில் நடத்தப்பட்டன.
அவற்றில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 28 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர், நாமக்கல், திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றன. சுமார் 45 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் முப்பத்தி ஆறாயிரம் வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்தப் போட்டிகளில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர்.போட்டிகள் நிறைவடைந்த நிலையில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் பிரம்மாண்ட விழா இன்று சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஒரே நாளில் வேலை..! மாற்றுத்திறனாளியின் கோரிக்கை..! சட்டென நிறைவேற்றிய CM விஜய்..!
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும் தனிநபர் வீரர்களுக்கும் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி கௌரவிக்கிறார். மொத்தமாக சுமார் பதினேழு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத்தொகை இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. இது விளையாட்டுத் துறையில் ஈடுபடும் இளைஞர்களுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.மேலும் இந்த விழாவில் முதலமைச்சர் கோப்பை வெற்றியாளர்களுடன் மட்டும் நின்றுவிடாமல், சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களும் கௌரவிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.200க்கு 10 மளிகை பொருட்கள்..! கூட்டுறவு அங்காடிகளில் வழங்க முடிவு..! தமிழக அரசு அறிவிப்பு.!