×
 
☰

ஒரே நாளில் வேலை..! மாற்றுத்திறனாளியின் கோரிக்கை..! சட்டென நிறைவேற்றிய CM விஜய்..!

வேலைக்காக முதல்வரிடம் மாற்றுத்திறனாளி கோரிக்கை வைத்த நிலையில் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழாவில், நவீன மின் ஆய்வகங்கள் திறந்து வைக்கப்பட்டன. மாநில அளவிலான திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி முழுவதும் இளைஞர்களின் திறமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மாணவர்களுடன் உரையாடிய முதலமைச்சர், அவர்களின் கனவுகளையும் கோரிக்கைகளையும் பொறுமையாகக் கேட்டறிந்தார்.அப்போதுதான் ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர் முன்வந்தார். தினேஷ் என்ற அந்த இளைஞரால் பேச முடியவில்லை. செய்கை மொழியின் மூலம் தனது கோரிக்கையைத் தெரிவித்தார்.

தனக்கு ஒரு வேலை வாய்ப்பு வேண்டும் என்று எழுதப்பட்ட மனுவை முதலமைச்சரிடம் நீட்டினார். சுற்றியிருந்த அதிகாரிகளும் பார்வையாளர்களும் அமைதியாகக் காத்திருந்தனர். முதலமைச்சர் விஜய் அந்த மனுவை உடனடியாக வாங்கினார். கனிவுடன் அதைப் பெற்றுக்கொண்ட அவர், நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். பின்னர் அந்தக் கடிதத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், தனது கோட்டின் உள்பைக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டார். இந்தச் செயல் அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.

இதையும் படிங்க: ரூ.200க்கு 10 மளிகை பொருட்கள்..! கூட்டுறவு அங்காடிகளில் வழங்க முடிவு..! தமிழக அரசு அறிவிப்பு.!

ஒரு சாதாரண மனுவாக அல்லாமல், தனிப்பட்ட பொறுப்பாக அவர் ஏற்றுக்கொண்டதை அனைவரும் உணர்ந்தனர்.நிகழ்ச்சி முடிந்ததும் அந்த மனு உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அடுத்த நாள் காலையிலேயே நடவடிக்கை தொடங்கியது. தினேஷ் சென்னை தலைமை செயலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கு அவருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணிக்கான ஆணையை முதல்வர் விஜய் வழங்கி இருந்தார். ஒரு நாளில் கோரிக்கை பெறப்பட்டு, அடுத்த நாளே அரசுப் பணி கிடைத்தது. 

 

இதையும் படிங்க: தவெக உட்கட்சி பூசலை சமாளிக்க மிட் நைட் மீட்டிங் வைத்த ஆனந்த்! தவெக நிர்வாகிகளுக்கு அளித்த உத்தரவாதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share