×
 

தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் அடாவடி... பூசாரியை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு...!

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் அடாவடியில் ஈடுபட்டார்.

முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழா தேவர் ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கர் தேவர் சிலைக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி, இன்று 118 ஆவது தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பூசாரியை ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பூசாரியை வெளியே போகச் சொல்லி அடாவடியில் ஈடுபட்டுள்ளார். நினைவிடத்தின் உள்ளே வந்த ஸ்ரீதர் வாண்டையார் எதற்காக இத்தனை பூசாரிகள் இங்கு நிற்கிறீர்கள்? வெளியே செல்லுங்கள் என கூறியுள்ளார். தொடர்ந்து, பூசாரியை நெஞ்சில் கை வைத்து தள்ளிய ஸ்ரீதர் வாண்டையார், அவரை கன்னத்தில் அறைந்ததால் தேவர் நினைவிடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பூசாரிக்கு ஆதரவாக வந்தவர்களையும் ஸ்ரீதர் வாண்டையார் ஆதரவாளர்கள் தடுத்து தள்ளிவிட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். பூசாரியை கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார், அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்தும் நினைவிடத்தில் இருந்து வெளியே வர மறுத்து அங்கேயே அமர்ந்து தர்ணா செய்தார். தொடர்ந்து காவல்துறையினரிடமும் ஸ்ரீதர் வாண்டையார் வாக்குவாதம் செய்தார்.

இதையும் படிங்க: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி... களைகட்டிய மதுரை... EPS, TTV தினகரன் மரியாதை...!

பூசாரிகள் கூறுவதையும் ஏற்க மறுத்து அவர் தர்ணா போராட்டத்தை நடத்தினார். தொடர்ந்து தேவர் நினைவிடத்திற்கு வந்த டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஸ்ரீதர் வாண்டையாரை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து நினைவிடத்தில் இருந்து எழுந்த ஸ்ரீதர் வாண்டையார் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு புறப்பட்டார். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: OPS+TTV+செங்கோட்டையன் சந்திப்பு… யாருக்கு எச்சரிக்கை?... பரபரக்கும் அரசியல் களம்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share