OPS+TTV+செங்கோட்டையன் சந்திப்பு… யாருக்கு எச்சரிக்கை?... பரபரக்கும் அரசியல் களம்…!
ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் பசும்பொன் அருகே சந்தித்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தான் மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்த செங்கோட்டையன் கட்சியிலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, அப்போதுதான் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்றும் தெரிவித்து வருகிறார். கட்சியின் தலைமைக்கு 10 நாள் விடுவித்தார் செங்கோட்டையன். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவியை பறித்தார்.
என்ன நடந்தாலும் கட்சி ஒருங்கிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றும் ஒருங்கிணைப்பு குழுவை அமைப்போம் எனவும் செங்கோட்டை என் தெரிவித்தார். இதனிடையே, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழாவை ஒட்டி அவரது திருவருவ சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு ஓ. பன்னீர் செல்வமும் செங்கோட்டையனும் சேர்ந்து ஒரே காரில் பயணம் மேற்கொண்டனர்.
மதுரையில் இருந்து ஓபிஎஸ் காரில் ஏறி பசும்பொன் புறப்பட்டு சென்றார் செங்கோட்டையன். இதையடுத்து, பசும்பொன் அருகே ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் சந்தித்தனர். பசும்பொன் செல்லும் வழியில் உள்ள நெடுங்குளம் என்ற இடத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, மூன்று தலைவர்களின் ஆதரவாளர்களும் உற்சாகத்துடன் முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க: அரசியல் களமாக மாறிய பசும்பொன்... ஓபிஎஸ்-செங்கோட்டையன் பயணம்! இபிஎஸ் தடாலடி பதில்...!
அணிகள் இணைப்பு என்ற புள்ளியை தாண்டி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்கள் நகர்த்தப்படுகிறதா என்றும் தேவர் ஜெயந்தியின் மூன்று பேரும் ஒன்றாக சந்தித்தது யாருக்கான எச்சரிக்கை செய்தி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பசும்பொன் முழுமையாக அரசியல் களமாக மாறி இருப்பதற்கு இது மிகப் பெரிய சான்றாக அமைகிறது.
இதையும் படிங்க: ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்... எடப்பாடியை சீண்டும் KAS...!