”இது தளபதி விஜய் ஆட்சி...” - இரவில் ரெய்டு வந்த ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.... அதிர்ந்து போன அரசு மருத்துவமனை...!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை இரவு நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி. சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, சமையலறை தூய்மையாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் புதிய கட்டிட பணி தொடங்கப்பட்ட காலம் மற்றும் முடிவடையும் காலம் குறித்த விளம்பர பலகை உடனடியாக வைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டுகளுக்கு சென்ற அவர் அங்கு இருந்த நோயாளிகளிடம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மருத்துவமனைக்கு வரும் அவசரகால நோயாளிகள் பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக உள்ள புகார் குறித்து தலைமை மருத்துவர் ஆத்திகுமாரிடம் கேட்டார். காலி பணியிடங்களால் அவசர சிகிச்சைக்கான முதல் சிகிச்சைகளுக்கு பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளதாக தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுக்கடைகளுக்கு செக்.! செம்ம ஸ்பீடு... ஒரே வாரத்தில் 513 டாஸ்மாக்கை மூடிய விஜய் அரசு..!
மேலும், மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்படும் புதிய கட்டிடங்கள் கட்டுமான மிகவும் தாமதமாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் அதற்கான காரணத்தை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி. சரவணன், புதிய கட்டிடம் கட்டும் பணி எப்போது தொடங்கியது அது முடிவடையும் காலம் குறித்த தகவல் பலகை வைக்கப்படாதது தவறு. அதனை உடனடியாக வைக்க வேண்டுமென தலைமை மருத்துவருக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சமையலறை பழமையான ஓட்டு கட்டிடத்தில் சேதமடைந்த நிலையில் இருப்பதை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன், சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் தூய்மையாக இருக்க வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் தனது சொந்த நிதியில் சமையல் பாத்திரங்கள் வாங்கித் தருவதாகவும் தெரிவித்தார். இரவு நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி யார்?! யாரை நியமிக்கப் போகிறார் முதல்வர் விஜய்?!