×
 

“காதலிக்கலைன்னா ஆசிட் அடிச்சிடுவேன்...” - சிறுமிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த தவெக நிர்வாகி மீது பாய்ந்தது போக்சோ...!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு.,தவெக நிர்வாகி தலைமறைவு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ். கொடிக்குளம் பேரூராட்சியை சேர்ந்த தமிழக வெற்றி கழகம் பேரூராட்சி இணைச் செயலாளர் ஜோசப் (30) என்பவர் 17 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு ஒரு தலைபட்சமாக தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

மேலும் சிறுமி அருகே உள்ள கடைகளுக்கு சென்று வரும்போது எல்லாம் ஜோசப் துரத்தி வந்து பேசுவதாகவும்  தன்னை காதலிக்க மறுத்தால் ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் தமிழக வெற்றி கழக நிர்வாகி ஜோசப் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். 

வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக பெற்றோர்களை கூமாபட்டி காவல்துறையினரிடம் அணுகியபோது தாமதப்படுத்தியதாகவும், பின்னர் மகளிர் காவல்துறைக்கு மாற்றப்பட்டு தாமதமாக வழக்கு பதிவு செய்ததாகவும் இதனை அறிந்த ஜோசப் தலைமறைவாகியதாத கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... காமுகன் மீது பாய்ந்தது போக்சோ...!

மேலும் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்த செய்தியை காவல்துறையினர் மறைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் தினந்தோறும் அரங்கேறி வரும் நிலையில் தமிழக வெற்றி கழக நிர்வாகி சிறுமியை தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share