கல்வியே வாழ்வின் வெற்றிக்கு துணை..! +2 மாணவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து..!
தேர்ச்சி பெற்ற பிளஸ் டூ மாணவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பயின்ற சுமார் எட்டு லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய உயர்நிலை வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு +2 தேர்வுகள் மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றன.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.20% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் டூ பொதுத்தேர்வில் 7.53 லட்சம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளை அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பொது தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் துணை தேர்வுக்கு மே 29ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் கூறி உள்ளார்.
இதையும் படிங்க: அவசரப்பட்டு போகாதீங்க..! கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்..!
அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார். மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள் எனவும் தெரிவித்தார். கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரும்பான்மையை ராஜ் பவனில் தான் நிரூபிக்கணுமா..? விஜய்க்கு வழி விடுங்க..! கமல்ஹாசன் காட்டம்..!